பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின்
வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக
பார்க்கலாம்.இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும்
நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில்...
குழந்தையின் வளர்ச்சி :
பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம்
மாறிக்கொண்டே செல்கிறது.பிறந்த குழந்தையானது...
முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்
2-வது
மாதத்தில் :
மற்றவர்களைப்
பார்த்து சிரிக்கும்
3-வது
மாதத்தில் :
தலை ஆடாமல்
நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.
5-வது
மாதத்தில் :
நன்றாகப் புரளும்.
மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.
6-வது
மாதத்தில் :
தன் உருவத்தைக்
கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’,
‘பா’ போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.
7-வது
மாதத்தில் :
மற்றவர்களுடைய
உதவி இல்லாமல் உட்காரும்.
8-வது
மாதத்தில் :
தவழும்.
9-வது
மாதத்தில் :
மற்றவர்கள்
உதவியுடன் நிற்கும் ‘மாமா’, ‘பாபா’ போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் ‘டாட்டா’ சொல்லும்.
10-வது
மாதத்தில் :
மற்றவர்கள்
உதவியுடன் தளர்நடை நடக்கும்.
12-வது
மாதத்தில் :
மற்றவர்களுடைய
உதவி இல்லாமல் நிற்கும் அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.
13-வது
மாதத்தில் :
மற்றவர்களுடைய
உதவி இல்லாமல் நடக்கும்.
24-வது
மாதத்தில் :
மாடிப்படி ஏறும்.
சிறு வாக்கியங்களைப் பேசும்.
36 வது
மாதத்தில் :
மூன்று சக்கர
சைக்கிள் ஓட்டும்.

No comments:
Post a Comment